அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சர்ச்சைகளுக்கு இடையே நல்ல வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் `மெர்சல்'.
அதனைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒளிப்பதிவாளராக கிரீஸ் கங்காதரனும், இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா, தோனி படத்தில் சுசாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக, சாக்ஷியாக நடித்த கியாரா அத்வானி உள்ளிட்ட நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாக இருக்கின்றன. அதேநேரத்தில் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தேர்வு விரைவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் திரைக்கதையில் ஏ.ஆர்.முருகதாஸ் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment