இந்த வசனமும், இதைச் சொல்லியவாறு அறிமுகமாகும் நாயகனும் உலகம் முழுவதுமே பிரபலம். பிரிட்டிஷ் உளவுத்துறையான MI-6ன் சிறப்பு அந்தஸ்து (00) பெற்ற உளவாளிதான் ஜேம்ஸ் பாண்ட். வெளி உலகுக்கு கடற்படை துணைத் தளபதி என அடையாளம் தெரிந்த இவர் நாவல்கள், காமிக்ஸ், சினிமா என்று அனைத்து தளங்களிலும் வெற்றிபெற்ற ஒரே கதாபாத்திரமாவார். இன்றுதான் (அக்டோபர் 5-ஆம் தேதி) முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான டாக்டர் நோ இங்கிலாந்தில் லண்டன் பெவிலியனில் 1962-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
அதுவரையில் நாவல் மற்றும் காமிக்ஸ் ஸ்ட்ரிப்புகளாக மட்டுமே தெரியப்பட்டு வந்த பிரபல 007 கதாபாத்திரம் இன்றுதான் முதன்முறையாக வெள்ளித்திரையில் வெற்றிகரமாக வலம் வரத்துவங்கியது. இதற்கு முன்பே காசினோ ராயல் என்ற பகடி செய்யும் படத்தில் இந்த 007 பாத்திரம் வந்து இருந்தாலும், முறையாக கதாசிரியர் இயன் ஃப்ளெம்மிங்கின் ஆசியோடு வெளிவந்த முதல் 007 படம் இதுதான்.
ஜேம்ஸ் பாண்ட் - ஒரு அறிமுகம்: இங்கிலாந்து உளவுத்துறையில் ஒரு 0 அந்தஸ்து பெற்றால் யாரையும் சுட அனுமதி தரப்படும். இரண்டு 00 அந்தஸ்து பெற்றால் நாட்டின் பாதுகாப்புக்காக யாரையும் கொல்ல அனுமதி பெற்றவர் என்று பொருள். அந்த வகையில், டபுள் ஓ அந்தஸ்து பெற்ற ஏழாவது உளவாளிதான் நம்ம ஜேம்ஸ் பாண்ட். 11 வயதில் தனது பெற்றோர்களை ஒரு விபத்தில் இழந்த ஜேம்ஸ், அத்தையின் பராமரிப்பில் வளர்கிறார். ஜெர்மன், ஃப்ரெஞ்சு மொழிகளில் புலமை பெற்ற இவர், நடத்தையின் காரணமாக பள்ளியில் இருந்து மாற்றப்படுகிறார். குத்துச்சண்டை மற்றும் ஜூடோவில் சிறந்து விளங்கிய தன்னுடைய தந்தையின் நண்பரின் உதவியோடு கடற்படையில் சேர்கிறார். அதன்பிறகுதான் இவர் உளவாளியாகிறார்.
உருவான கதை: இயன் ஃப்ளெம்மிங்தான் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினரின் மகனான இவர், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு இரண்டாம் உலகப்போரில் கடற்படை புலனாய்வுத் துறையில் பணியாற்றினார். இவரது தலைமையில்தான் ஆபரேஷன் கோல்டன் ஐ செயல்பட்டது. இவரது திட்டமிடல் & மேற்பார்வையில் மேலும் இரண்டு புலனாய்வு செயற்குழுக்கள் இயங்கின. பின்னர் இந்த விவரங்களை மையமாக வைத்துதான் ஃப்ளெம்மிங் தன்னுடைய கதாபாத்திரங்களையும், கதைக்களனையும் வடிவமைத்தார்.
போர் முடிந்தபிறகு, த சன்டே டைம்ஸ் பத்திரிக்கையின் வெளிநாட்டு மேலாளராக செயல்பட்டார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட பிறகு தன்னுடைய கவனத்தை திசைதிருப்ப இவர் எழுதிய நாவல்தான் கேசினோ ராயல் என்ற முதல் ஜேம்ஸ் பாண்ட் நாவல். மேற்கிந்தியத் தீவான ஜமைக்காவில் 17-02-1952 அன்று எழுத ஆரம்பித்த இந்த நாவல் அடுத்த வருடம் புத்தகமாக வெளியானது. முதல் புத்தகம் உடனடியாக விற்றுத் தீர்க்க, அடுத்தடுத்து மூன்று முறை மறுபதிப்பு செய்யப்பட்டது கேசினோ ராயல்.
இவர் ஜமைக்காவில் தனது கதாநாயகனுக்கான பெயரை யோசித்துக்கொண்டு இருந்தபோது புகழ்பெற்ற பறவையியல் ஆய்வாளரான ஜேம்ஸ் பாண்ட் நினைவுக்கு வர, அவரது பெயரையே தனது ஹீரோவுக்குச் சூட்டினார். இவரது எழுதிய நாவலை டைப் செய்துகொடுத்தவர் டைம்ஸ் பத்திரிக்கையில் இவரது செகரட்டரியான ஜான் ஹோவே என்ற சிவப்பு முடியுடைய பெண்மணி. இவரை மனதில் வைத்துதான் ஜேம்ஸ்பாண்டின் உளவுத்துறை செயலர் மணிப்பென்னி வடிவமைக்கப்பட்டார். போரில் தனக்கு மேலதிகாரியாக இருந்தவரை மனதில் வைத்து உளவுத்துறை தலைவரான எம் கதாபாத்திரத்தை அமைத்தார். இதுமட்டுமல்ல, ஃப்ளெம்மிங்கின் நண்பர்கள், நிஜவாழ்க்கையில் இவருடன் சுமூக உறவில் இல்லாதவர்கள் என்று பலரையும் ஜேம்ஸ்பாண்ட் தொடரில் கதாபாத்திரங்களாக்கினார்.

டாக்டர் நோ: ஜேம்ஸ் பாண்டின் முதல் அதிகாரபூர்வ திரைப்படத்தின் வில்லன் பெயர்தான் டாக்டர் நோ. இவர் செயற்கைக் கரங்களை கொண்டவர். இவர் ஒரு தீவையே விலைக்கு வாங்கி, அங்கே ஒரு தனிப்பட்ட ராஜ்ஜியத்தை நடத்தி வருவார். அத்தீவில் கிடைக்கும் பறவைக் கழிவுகளை விற்று இலாபம் சம்பாதித்து வந்தாலும், இவர் உலகை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்பினார். அமெரிக்கா ஏவும் ராக்கெட்டுகளை வானிலேயே வழிமறித்து செயலிழக்கச் செய்து வந்தார். இவரைப் பற்றி ஆராய இரண்டு உளவாளிகள் வர, அவர்கள் காணாமல் போகிறார்கள். அவர்களைத் தேடிக்கொண்டு ஜேம்ஸ்பாண்ட் வருவதில் இருந்துதான் கதை ஆரம்பிக்கிறது.
ஹை-லைட்ஸ்: கடலிலிருந்து பிகினியில் உர்சுலா ஆண்ட்ரூஸ் வரும் காட்சி, டாக்டர் நோவும் ஜேம்சும் விவாதம் செய்யும் காட்சி, மனித உடலின் தாங்கும் திறனைப்பற்றிய ஆராய்ச்சியில் ஜேம்ஸை பரிசோதிக்கும் இறுதிக் காட்சிகள் என்று படத்தில் பல அட்டகாசமான காட்சிகள் உண்டு. இவற்றில் சில காட்சிகள் தமிழில் ஜெய்சங்கர் படத்திலும் வந்தது குறிப்பிடத்தக்கது.
காமிக்ஸ் கனெக்ஷன்: இயன் ஃப்ளெம்மிங் நாவலாக எழுதிய டாக்டர் நோவை, காமிக்ஸ் வடிவிற்கு மாற்றியவர் பிரபல பிரிட்டிஷ் காமிக்ஸ் படைப்பாளியான பீட்டர் ஓ டானல் (இவரது காமிக்ஸ் படைப்பான மாடஸ்டியின் முதல் திரைப்படம் வந்தபோது, அதை லேடி ஜேம்ஸ்பாண்ட் என்று பத்திரிகைகள் குறிப்பிட்டது சுவையான ஒரு சம்பவம்). ஜான் மெக்லஸ்கி ஓவியம் வரைந்து 1960ஆம் ஆண்டு வெளியான இந்த காமிக்ஸ், பின்னர் டாக்டர் நோ திரைப்படம் எடுக்கப்பட்டபோது, அதற்கு ஸ்டோரிபோர்ட் ஆக பயன்படுத்தப்பட்டது.
ட்விஸ்ட்: டாக்டர் நோ திரைப்படத்தில் வில்லன் இறப்பதுபோல காண்பிக்கப்பட்டாலும், காமிக்ஸ் கதை வரிசையைப் பொருத்த வரையில், அவர் உயிர்பிழைத்து மறுபடியும் Hotshot (கதிர்வெடி) என்ற கதையில் தோன்றுவார். இத்திரைப்படத்தின் அசாத்திய வெற்றிக்குப் பிறகு அமெரிக்காவில் ஷோகேஸ் பதிப்பகம் இந்த திரைப்படத்தின் கதையை அப்படியே ஒரு காமிக்ஸ் புத்தகமாக வெளியிட்டனர். பின்னர், க்ளாசிக்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் நிறுவனமும் அந்தக் காமிக்ஸ் புத்தகத்தை மறுபதிப்பு செய்தனர்.
தமிழில் ஜேம்ஸ் பாண்ட்: ராணி காமிக்ஸ் இதழில் 007 கதைகளை வெளியிட்டு அவரை நமக்கெல்லாம் நன்கு அறிமுகப்படுத்தினார்கள் தமிழில் ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ் எந்த அளவிற்குப் பிரபலம் என்றால், அவரது கதைகளின் உரிமைக்காக ஒரு காலத்தில் பதிப்பகங்களுக்கு இடையே போட்டியே நடக்கும். தமிழில் இப்போது வெளிவரும் ஒரு பிரபல நிறுவனம் ஜேம்ஸ் பாண்ட் காமிக்ஸ் என்ற பெயரில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதோ கதைகளை எல்லாம் வெளியிட்ட கொடுமையும் நடந்தது. இதுபோன்ற செயல்களால், இப்போதைக்கு ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ் உரிமைகளை தமிழ் மொழிக்குக் கொடுப்பதில்லை என்று உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
பின்குறிப்புகள்:
* ஷான் கானரியை ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வைப்பதில் கதாசிரியர் ஃப்ளெம்மிங்குக்கு விருப்பமே இல்லை.

* இயன் ஃப்ளெம்மிங் படத்தைப் பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா? Dreadful, Simply Dreadful.
* உர்சுலா ஆண்ட்ரூஸ் பிகினியில் இருக்கும் படத்தின் போஸ்டரை வடிவமைத்தவர் டேவிட் சாஸ்மேன். இதை வரைந்தவர் மிட்செல் ஹூக்ஸ்.
No comments:
Post a Comment