![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1BH7tcq3jFdSgX4hS8HxaFi5Bq7T8CFvk_GNvbm_KHxC7SDkVav0iKZ1VaZ2oajt92txyTLp-LQNg4Jg5DGLnsKmA2gENaClnvHUjEC7p-NAuZeBrdsol6pe7zWpFJ9MoDeC5IBglZlMa/s640/samantha.jpg)
சென்னை: விளம்பரத்திற்கு வெளியிடப்பட்ட சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் 'டிங் டாங்' புரோமோ, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆரண்யகாண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள இத்திரைப்படத்தில், சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்தள்ளனர்.
இத்திரைப்படம் வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி, படக்குழு சார்பில் 'டிங் டாங்' எனும் விளம்பர பாடல் வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளது
இப்பாடல்."ஒரு ஊர்ல கொடூரமான ராஜா இருந்தானாம்... கம்னாட்டி பசங்க... நாங்க மேட்டர் பண்ணிட்டோம்... யார் சாட்சி... ஷில்பா... டிங் டாங்..", என்ற வார்த்தைகளை ரிப்பீட் மோடில் போட்டு, இந்த புரோமவை உருவாக்கியுள்ளனர். இது பார்க்கும் போது படம் குறித்து புரிதல் ஏற்படவில்லை என்றாலும், ரசிக்கும்படியாக உள்ளது.
டிங் டாங்' புரோமோ பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த புரோமோவை பார்த்துள்ளனர். 35,000 பேர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
No comments:
Post a Comment