பத்தாயிரம் ரூபாய் பட்டு புடவையில்
அவளை பார்த்து வராத அழகு
நான் போடும் முழுக்கை சட்டையை
அன்றொரு நாள் இரவில்
அவள் போட்டு கொண்டு நின்ற
போது வந்தது அவ்வளவு அழகு....
சிகையலங்கார நிபுணரிடம் சென்று
கண்ணை கவரும் கூந்தலை
செதுக்கி வந்த போது வராத அழகு
என்னிடம் பேசும் போதே கூந்தலை
ஒதுக்கி கொண்டை போடுவாளே
அப்போது வந்தது கொள்ளை அழகு....
நெத்தியில் ஒரேயொரு குட்டி பொட்டு
வைத்து காதில் ஜிமிக்கி கம்மல் இட்டு
நீர் ஒழுகும் அடர்ந்த கூந்தலை
முதுகு பூரா படரவிட்டு நடந்து வரும்
அழகு இருக்கே அது பல உலக
அழகிகளை விட பேரழகு.....
கோவிலில் தீபாராதனை காட்டும்
வேளையில் அங்கு பார்க்காமல்
நான் பார்ப்பதற்காக என்னங்க
இங்க பாருங்க ன்னு என் காதில் மட்டும்
விழும்படி கூப்பிட்டு கண்ணில் விழாமல்
விபூதி குங்குமம் வச்சு விடுவா
அது அவ்வளவு அழகு...
ஏதோ ஒரு திருமண விழா பந்தியில்
எதிர் எதிர் வரிசையில் சாப்பிடும் போது
கைக்குட்டையை துடைப்பது போல
துடைத்து என்னை ஒழுங்காக சாப்பிட
சொல்லி கண்களால் பேசுவாள்
அப்போது அவ்வளவு அழகு...
எந்த மருந்திற்கும் அசைந்து கொடுக்காத
தலைவலியை அவள் அழகு
விரல்களால் கோதி விட்டு கொண்டே
என் கண்களை பார்த்து சரியாயிடும்
ரிலாக்ஸாக இருங்கன்னு அவள் விடும்
புன்னுருவல் அவ்வளவு அழகு...
இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது
இடது பக்க கண்ணாடியில் என்னை
பார்த்துக்கொண்டே முகத்தை ஷேவ்
பண்ணா தான் என்னா இப்படியாவா
இருப்பீங்கன்னு கோவிக்கும் போது
அவ்வளவு அழகு...
கலவி முடிந்து பின்னரும்
விட்டு விலகாத வேளையில்
உதட்டை கடித்து புருவத்தை தூக்கி
வலது கண்ணை அடித்து காண்பிக்கும்
அந்த சமயத்தில் அவள் அவ்வளவு
கொள்ளை அழகு....
No comments:
Post a Comment