நடிகர்கள் - ஜெய்,வைபவி சாண்டில்யா,அதுல்யா ரவி
இயக்கம் - எஸ்.ஏ. சந்திரசேகர்
சினிமா வகை - Romantic Comedy
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheEEmHDFmqcmQGdY_MfMPY00FZy2Q_OiKNd4pHHfG-vUHF64_drRFK77vNiPXNrRmNj-X_-alLMSlwYm-rpS2SKkNGrt2G2NnAPOoUXN4mLnpJBgUx5RcKHk6niCndHDgRbqzduFPpQjSt/s400/kepamari+movie+review+1.jpg)
ரயில் பயணத்தின்போது ஜெய் மது அருந்திவிட்டு வைபவி சாண்டில்யாவுடன் உறவு கொள்கிறார். போதையில் இருவரும் தவறு செய்த பிறகு அவரவர் வழியில் செல்கிறார்கள். பின்னர் ஜெய் வைபவியை திருமணம் செய்கிறார்.,,
திருமணத்திற்கு பிறகு தன்னுடன் வேலை செய்யும் அதுல்யா ரவியுடன் கள்ளத்தொடர்பு வைக்கிறார் ஜெய். அதுல்யாவுடனும் குடிபோதையில் உறவு கொள்கிறார். அதன் பிறகு அவர் வாழ்க்கை என்னவாகிறது என்பதே கதை..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhccKRunMGxFIt_rx9EMdgty6jqJhbamFDGIZ228vFnHHqz83yr6gT-4Yk4WIbipiNEvAtat70ykHJnY_R87NvVX7zV0HxYu13836mV6q49XBAF_hKJQMJd9EJoZiEWoFzmuySxXomYWiEj/s400/maxresdefault.jpg)
ஜெய் ஆணுறை வாங்க கடைக்கு செல்லும்போது ஒரு பாட்டு வருகிறது. அதை பார்த்து பிறகு கடுப்பாகாமல் இருக்க முடியவில்லை. எந்த காலத்தில் எழுதிய கதையையோ தற்போது படமாக்கியிருக்கிறார் எஸ்.ஏ.சி. ஹீரோவின் பெயர் விஜய். நல்ல வேளை இந்த படத்தில் விஜய் நடிக்கவில்லை. நடித்திருந்தால் அவரால் பல காலம் வெளியே தலை காட்ட முடியாது...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMR1zaJFxfmTgZBBhmGMoPuVYHJARy6nUouTMp8nkrgpUFWs7gfzscGZU0VWOAwsZPJwqCP2teDVWhIEcEhw22j8wnDXGF7TwEIGbuPHdIrEMdTTtBABQA2eiZVIE6sFY9JdWGdkBUZzm5/s400/images+%25281%2529.jpg)
வைபவி என்னவென்றால் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் கணவன் ஜெய்யை பிரியாமல் உள்ளார். அதுல்யாவோ அடுத்தவளின் புருஷனுடன் தொடர்பில் இருப்பதை நினைத்து கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை. படத்தில் இரண்டு ஹீரோயின்களின் முகத்தை காட்டியதை விட கால்களை க்ளோசப்பில் காட்டியதே அதிகம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBq9qpWOtwydgxQ6lnG-dFp6P0Xr2jXwz6G_XQ-28ScNFlHZSa_Cgt4CaX_y2fLPog8c7xmZP7E25loTOvFyhP3lc-8kOrswMD0rS-RB58idjboIQ_kyp5q1XzhfammxJRxZTzru3G0VKa/s400/kepamari+movie+review.jpg)
இதற்கு பெயர் காதல் இல்லை எஸ்.ஏ.சி. காமம். இப்படி ஒரு படத்தை எடுத்து உங்களின் இத்தனை ஆண்டு கால கெரியருக்கு நீங்களே சூனியம் வைத்துக் கொண்டுள்ளீர்கள். ஜெய் இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளியே வருவாரோ?
No comments:
Post a Comment