காதல் கவிதை




அன்று இரவில் இருந்தே முரளிக்கு தூக்கம் வரவில்லை .காரணம் மறுநாள் தன்னோட பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை சந்தித்து தன்னோட திருமண அழைப்பிதழ் தர போகிறோம் என்ற மகிழ்ச்சியில் .இத்தனை ஆண்டுகள் கழித்து நண்பர்களை அனைவரையும் ஒருவர் மூலமாக இன்னோருவரை தேடி கண்டுபிடித்தான்.மறுநாள் காலை திட்டப்படி தனது நண்பன் தீபனுடன் காரில் கிளம்பினான் .
முதலில் கார் நின்றது அவன் படித்த பள்ளி வாசலில் தான் அவனோட அறிவியல் டீச்சர் தான் இப்போ தலைமையாசிரியரா இருக்கிறார் .அவருக்கு முதல் பத்திரிக்கையை கொடுத்துவிட்டு இதே பள்ளியில் டீச்சர் வேலை பார்க்கும் நண்பன் இலக்கியனை சந்தித்தார் .பழைய கதைகள் நிறைய பேசி மகிழ்ந்தனர் .காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை சமயம் என்பதால் அங்கும் இங்குமாய் சில மாணவர்கள் நடமாடியபடி இருந்தனர் .முரளி தனது நண்பர்களுடன் தான் கடைசியாய் படித்த அந்த வகுப்பறைக்குள் நுழைந்தான் .அதுவரை காலியாக இருந்த வகுப்பறை அவனது நினைவுகளால் நிறைந்தது .கடைசி பெஞ்சில் இருந்து அசோக் அவனை உக்கார கூப்பிடுவது போல் உணர்ந்தான் .அந்த பெஞ்சில் அமர்ந்ததும் அந்த வகுப்பறை முழுவதும் அவனை திரும்பி பார்ப்பதாய் உணர்ந்தான் .
முரளி எப்பவுமே கடைசி பெஞ்ச் ஸ்டுடண்ட் தான்.இதுக்கும் நல்லா படிப்பான்.அப்புறம் ஏன்?அதுக்கு காரணம் சரியான குண்டு .உயரமும் கூட.பின்னாடி இருக்குறவங்களுக்கு போர்டு தெரியாது அதுனால தான்.எல்லா வகுப்பிலும் கடைசி பெஞ்ச்ல தான் ஹிரோக்கள் இருப்பாங்க .ஸ்போர்ஸ் வின்னர்ஸ்.எழுத்தாளர்கள்னு படிப்ப தவிர மத்தப்படி எல்லாம் தெரிஞ்சவங்க இருப்பாங்க .முரளியோட பெஸ்ட் ப்ரண்ட் அசோக் .அந்த ஸ்கூலுக்கே ஹிரோ அவன் தான்.மாவட்ட ரீதியில் ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன்.மாநில அளவுக்கு தயார் ஆயிட்டு இருந்தான் .பாக்கவும் ஹிரோ போல இருப்பான் .அவனோட காதலி வினோதா .இரண்டு பேருக்குள்ளும் காதல் இருந்தது .வகுப்பறையில் அவர்கள் இருவருக்குள்ளும் காதல் பார்வைகள் படரும் போது அது கவிதையாய் இருக்கும் .முரளி அதை கவனித்துவிட்டு சிரிப்பான்.அவர்கள் இருவருக்குள்ளும் முரளி நடுவில் இருந்தான் .அவள் கொடுப்பது முரளியிடம் போய் அசோக் கைக்கு வரும் .அசோக் இன்னும் இரண்டு நாட்களில் மாநில அளவிளான போட்டிக்கு கடுமையாக பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தான் .மைதானத்தில் அமர்ந்து முரளியும் வினோதாவும் வேடிக்கை பார்த்தப்படி பேசிக்கொண்டு இருந்தனர் .அப்போது வினோதா "முரளி உனக்கு ஏன் அசோக் ரோம்ப புடிச்சிருக்கு ?எப்பவுமே அவன் கூடவே இருக்க?என்றதும் அவள் பக்கம் திரும்பிய முரளி "அவன் மட்டும்தான் என்ன உண்மையா நேசிக்குறான்.நான் கறுப்பா இருக்கேன் குண்டா இருக்கேன் அதுல என் தப்பு என்னா இருக்கு.என்ன எதுக்குமே யாரும் சேத்தமாட்டாங்க .ஒதுக்கி ஒதுக்கி வச்சு ஒரு சமயத்துக்கு பின்னாடி நானே ஒதுங்கிக்க ஆரம்பிச்சுட்டேன்.அசோக் இந்த ஸ்கூல் வந்ததும் என் பக்கத்துல உக்காந்தான்.மத்தவங்கள போல என்கூடவும் பழகினான்.அவன் கூட இருக்குறது ரோம்ப புடிச்சு போச்சு .அவன் நட்புல அவ்ளோ நேர்மை"என்றான் .
வினோதா அவன் போட்டிக்கு கிளம்பும் போது ஒரு மோதிரம் வாங்கி அதை முரளியிடம் கொடுத்து "இதை அவன் ஜெயிச்சதும் என்னோட பரிசா போட்டு விடு "என்றாள் .பந்தயத்துக்கு தயார் நிலையில் அனைத்து வீரர்களும் இருந்தனர் .சத்தம் கேட்டதும் வீரர்கள் மின்னலாய் ஓடினார்கள் .முதலிடத்தில் ஓடிக்கொண்டு இருந்த அசோக் திடீர்ன்னு மயங்கி விழுந்தான் .அடுத்தடுத்த நொடிகளில் மருத்துமனை அழைத்து சென்றனர் .கொஞ்ச நேரத்தில் அவனை உள்ளிருந்து வெள்ளைக்கலர் போர்வையால் மூடி அழைத்து வந்தனர் .அவன் என் அருகில் வந்ததும் அவன் நன்றாக தூங்குவது போலவே இருந்தான் .தயவுசெய்து" எழுந்திரு" என்று கதறி துடித்தேன்.கொஞ்ச நேரத்தில் அங்கு கூடிய மொத்த பள்ளியும் கதறி துடித்தது .அவனுடைய இறுதி ஓட்டமும் ஒரு வழியாக முடிந்தது .ஒரு வாரத்துக்கு மேல நான் பள்ளிக்கூடம் போகல .என் கிளாஸ்டீச்சர்ஸ் வந்து கூட்டிட்டு போனாங்க .என்னால பழைய இடத்துல உக்கார முடியல அசோக் ஞாபகத்தால்.வேற இடத்துல உக்காந்தேன்.வினோதாவை பாக்கும் போது எல்லாம் அமைதியா தலைகுனிந்தபடி போயிருவேன் .ஒரு மாசத்துக்கு அப்புறம் வினோதா என்ன டியூசன் சென்டர்ல பாத்து "கிளம்பும் போது வெயிட் பண்ணு பேசலாம்னு "சொன்னா நானும் வாசல்ல காத்திருந்தேன் .அவளும் வந்தாள் .கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு வினோதா "முரளி, ஏன் இன்னும் இப்படியே இருக்க?.நீ நல்லா படிக்கனும்.அசோக் நம்ம இரண்டு பேருக்குமே பெரிய இழப்பு தான்.ஆனா அதை தாண்டி வந்து தான் ஆகணும் .அசோக் இடத்துல நான் இருக்கேன் நல்ல தோழியா உன் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் "என்றதும் நான் என்னோட பாக்கெட்ல இருந்த மோதிரத்த அவ கையில கொடுத்தேன் .அதை பாத்த அவ அதை என்னோட விரல்ல போட்டுவிட்டு "இது என் நண்பனுக்கு என்னோட பரிசு."என்றாள் .அன்று முதல் நாங்க ரோம்ப நல்ல நண்பர்களா இருந்தோம் .நான் +2 நல்ல மார்க் எடுத்து மருத்துவம் படிச்சேன் .அவ இன்ஜினியரிங் படிச்சா .அடிக்கடி சந்திச்சு பேசிப்போம் .உணர்வு பூர்வமான நட்ப உணர்ந்தேன் .ஒரு நாள் அவ என்னை சந்திக்க வரச்சொல்லி இருந்தா.நானும் போயிருந்தேன் .அப்போ அவ "முரளி ஒரு விஷயம் பளிச்சுனு சொல்றேன் .நான் உன்ன லவ் பண்றேனு நினைக்குறேன் .வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க .எனக்கு யாரையுமே புடிக்கலை .அப்புறம் தான் தெரிஞ்சது எனக்கு உன்னை தாண்டி யாரையுமே புடிக்காதுன்னு.நல்ல நண்பன் நல்ல கணவனா இருக்க முடியாதா ?இனி நீ தான் யோசிச்சு முடிவு பண்ணனும் "என்று முடிப்பதற்குள் நான் கிளம்பிவிட்டேன்.அவ என்னோட தோழி அவள காதலியா நினைச்சு கூட பாக்க விரும்பல .
அதுக்கப்புறம் அவள முரளி சந்திக்கவே இல்லை.அவளும் அவனை சந்திக்க முயற்சி பண்ணல .முரளி தன்னோட நண்பர்கள் ,ஆசிரியர்களுக்கு எல்லாம் பத்திரிக்கை கொடுத்துவிட்டு கடைசியாய் வினோதாவை நோக்கி புறப்பட்டான் .மனதில் ஆயிரம் கேள்விகளுடன் .மாலைக்குள் அவளது வீட்டை அடைந்து காலிங் பெல்லை அழுத்தினான்.உள்ளிருந்து வந்த அருண் இருவரையும் வரவேற்று அமரவைத்து "வினோதா வர்ற நேரந்தான்.கொஞ்சம் வெயிட் பண்ணுங்க "என்று காபி தந்தான்.ஆபிஸில் இருந்து வந்த வினோதா "டேய் முரளி எப்படிடா இருக்க?"என்று கேட்டப்படி கட்டியணைத்தாள் .அப்புறம் "முரளி இவர் என்னோட கணவர் பேரு அருண் "என்றாள் .பத்திரிக்கையை கொடுத்துட்டு வெளியேறியதும் அவள் கண்களில் நீர் ஆறாய் பெருகியதை கண்ட அருண்"எதுக்கு வினோதா இந்த நாடகம் ?"என்றதும் "அவன் என் காதல புரிஞ்சுகிட்டு தேடி வருவான்னு காத்திருந்தேன் .அவன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வர்றான்னு தெரிஞ்சதும் அவனுக்காக நான் காத்திருக்கேனு தெரிய வேண்டான்னு தான் உன்னை நடிக்க சொன்னேன் .அவன் சந்தோசம் எனக்கு ரோம்ப முக்கியம் "என்று அழுதப்படி பத்திரிக்கைய பிரித்தாள்.அதன் கவரில் "நானே எழுதிய காதல் கவிதை வினோதா "என்று எழுதியிருந்தது.உள்ளே மணப்பெண் என்ற இடத்துல வினோதா என்ற பெயர் இருந்தது .அதிர்ச்சியில் திகைத்தபடி இருக்கையில் காலிங் பெல் அலறியது.கதவை திறந்ததும் முரளி நின்றிருந்தான் .வினோதாவின் கண்ணீர் துடைத்து "ஸாரிடா உன் காதல் அப்ப புரியல .இப்ப புரியுது நீ என் வாழ்க்கைன்னு.என்னோட தாழ்வு மனப்பான்மைய தாண்டி வர கொஞ்சம் தாமதம் ஆகிருச்சு .நல்ல நண்பர்கள் கணவன் மனைவியா இருக்க முடியாதா ?கண்டிப்பாக முடியும் "என்றதும் அவனை இறுக கட்டியணைத்த...

No comments:

Post a Comment