தமிழ் மொழி


ஆங்கிலம் தெரியாவிட்டால்
அசிங்கமாக நினைக்கும் நாம் ,
தமிழையே தப்பாக பேசுகிறோம் என்று
தலை குனிந்தது உண்டா ?
இல்லை .....
தாய் என்றாலும் அலட்சியம்   
தாய்மொழி என்றாலும் அலட்சியம் ...

ஒரு இனத்தை அழிக்க அங்கு வாழும் மக்களை அழிக்க தேவையில்லை .
அவரகள் பேசும் மொழியை அழித்தலே போதும் ...

ஐம்பது ஆண்டுக்கு முன் விட்டு சென்ற மொழி மீது இருக்கும் ஆர்வம் ..
ஐய்யாயிரம் ஆண்டுக்கு முன் விட்டு சென்ற மொழி மீது இல்லை ??
ஏன் ?

காலம் மாறிவிட்டது .. ஆம் காலம் மாறிவிட்டது தான் ..

காலம் மாறிவிட்டது என்பதற்க்காக
தாய்,தந்தை உறவை மாற்றிவிட்டமா ? என்ன??
காலம் மாறலாம் , ஆனால் கடைசிவரை வாழப்போவது மொழி மட்டுமே ..

முடிந்தவரை தமிழை வளர்ப்போம் அது .
நாம் தலைமுறையை வளர்க்கும் ..
என்றும் தமிழனாய்.

No comments:

Post a Comment