பல்வேறு முக பாவங்களை காட்ட முடியுமா என்று எனக்கே சந்தேகம் -நித்யா ராம்.

நான் தமிழ்ல பேச ஆரம்பிச்சாலே, என் தாய்மொழியான கன்னடம் இயல்பாகக் கலந்து வந்துடுது. அதனால், பலரும் 'சீரியல் சரோஜாதேவி'னு கூப்பிடறங்க" என கொஞ்சிப் பேசுகிறார், 'நந்தினி' சீரியல் ஹீரோயின் நித்யா ராம்.

“கன்னட சீரியல் ஹீரோயின், தமிழில் கமிட் ஆனது எப்படி?” 

“பி.எஸ்சி., படிக்கும்போதே சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. படிப்பு பாதிக்கும்னு மறுத்துட்டு, சீரியல்ல மட்டும் நடிக்க ஆரம்பிச்சேன். ரெண்டு தெலுங்கு சீரியல் உள்பட பல கன்னட சீரியல்களில் நடிச்சுட்டேன். ஒரு கன்னட சீரியலைப் பார்த்துத்தான் 'நந்தினி' வாய்ப்பு வந்துச்சு. தாய்மொழியான கன்னடத்திலும் அதே கங்கா ரோல்ல நடிக்கிறது டபுள் சந்தோஷம். எங்க ஊர்க்காரர் ரஜினி சார் படங்களைப் பார்க்க ஆரம்பிச்சு, கமல் சார் படங்களால் தமிழ் சினிமா மேல பெரிய ஆர்வம் வந்திடுச்சு."

 “அப்பாவி கங்காவாக இருந்து, பாம்பு நந்தினியா மாறி நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கு?”

 “ஆரம்பத்துல அநியாயத்துக்கு அப்பாவியா நடிச்சுட்டிருந்தேன். கொஞ்ச நாளில் என் ரோல் நெகட்டிவாகிடுச்சு. என் உடம்புல நந்தினி ஆவி புகுந்து, இப்போ பலரையும் பழி வாங்க ஆரம்பிச்சுட்டேன். அப்பாவி கங்கா மாதிரியான ரோல்ல இதுக்கு முன்னாடியே நிறைய சீரியல்கள் பண்ணிட்டேன். இந்த நந்தினி கேரக்டர் திகில் அனுபவமா இருக்குது. இப்படி வெரைட்டி எக்ஸ்ப்ரெஷன்ஸ் காட்ட முடியுமானு எனக்கே ஆரம்பத்தில் சந்தேகமா இருந்துச்சு. அந்தச் சவாலை எடுத்து ஓரளவுக்கு ஜெயிச்சுட்டேன்னு நினைக்கிறேன். கன்னடப் படங்களில் குஷ்பு மேடம் ஹீரோயினா நடிச்சதைப் பார்த்து ரசிச்சிருக்கேன். இப்போ அவங்களே என் உடம்புல ஆவியா வந்து பழி வாங்குற மாதிரி நடிக்கிறது சூப்பர் அனுபவம்.”

 உங்க கன்னட தேசத்து ஃபேன்ஸ் என்ன சொல்றாங்க?”

 “எங்கே போனாலும் நந்தினி கங்கானுதான் சொல்றாங்க. உதயா சேனல்ல திங்கள் டு வெள்ளி வரைக்கும்தான் சீரியல் டெலிகாஸ்ட். சன் டிவியில் சனிக்கிழமையும் டெலிகாஸ்ட் ஆகறதால பலரும் ஆர்வத்தோடு சன் டிவியில் பார்க்கிறதா சொல்லியிருக்காங்க. என்னோட ஊருக்குப் போனாலும், ‘அடுத்து கதை எப்படி போகும்?’னு கேட்டுகிட்டே இருப்பாங்க. இப்படி எக்கச்சக்க ஃபேன்ஸ், ஃபாலோயர்ஸ் கிடைச்சிருக்கிறாங்க. ஆரம்பத்தில், பாசிட்டிவ் கங்கா கேரக்டரைப் பார்த்து, 'இப்படி ஒரு நல்லப் பொண்ணா'னு புகழ்ந்து பேசுவாங்க. இப்போ பல மொழி ரசிகர்களிடமும் நந்தினியாக திட்டு வாங்கிட்டிருக்கேன். ஒருமுறை தயாரிப்பாளர் சுந்தர்.சி சார் மற்றும் ரைடக்டர் ராஜ்கபூர் சார்கிட்ட, ‘என் கேரக்டரை கொஞ்சம் பாசிட்டிவா மாத்துங்க சார். எல்லோரும் திட்டுறாங்க’னு சொன்னேன். ‘அதுதானே உன் நடிப்புக்கான பாராட்டு’னு சொன்னாங்க. அதனால நெக்ட்டிவ் கமென்ட்ஸ் வருவதையும் அங்கீகாரமா எடுத்துக்கிறேன்."

“கிளாமரான பேயைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகமாகியிருக்கறது தெரியுமா?”

 (கல கலவென சிரிப்பவர்) “நல்லாவே தெரியும். ஆரம்பத்துல நடிக்க வரும்போதே, 'வேலைக்காரி கேரக்டர்னாலும் உன்னைப் பார்க்கும்போது அந்த ஃபீல் தெரியக்கூடாது. கிளாமராவும் ஆடியன்ஸ் ரசிக்கும்படியும் உன் டிரெஸ்ஸிங் இருக்கணும்'னு சொன்னாங்க. குஷ்பு மேம் டிசைன் பண்ணிக் கொடுக்கிற டிரஸ்ஸைத்தான் யூஸ் பண்றேன். யுனிக்கா இருக்கிறதால நிறைய ஃபேன்ஸ் உருவாகிட்டாங்க. எங்கே போனாலும் டிரெஸ் பற்றி கேட்கிறாங்க. என்னைப் போலவே, ஜானகி பேயா நடிக்கிற மாளவிகாவும் கிளாமரா டிரெஸ் பண்ணுவாங்க. கிளாமர் பேயை ரொம்பவே ரசிக்கிறோம்னு சொல்லும்போது மகிழ்ச்சியா இருக்கு.” “

'நந்தினி' பாம்பு, ஜானகி ஆவியோடு பயங்கரமா மோதுதே...”

“ஆரம்பத்தில் நானும் மாளவிகாவும் க்ளோஸ் ஃப்ரெண்டாகத்தான் நடிச்சோம். ஜானகி இறந்து ஆவியா வருகிறாள். என் உடம்புல இருக்கும் நந்தினி பாம்போடு மோதிக்கிட்டே இருக்கிறாள். ரெண்டு பேருமே எங்க பெஸ்டைக் கொடுக்கிறோம். 'நீங்க எவ்வளவு தூரம் போட்டிப் போட்டு நடிக்கிறீங்களோ, அந்த அளவுக்கு சீன்ஸ் சூப்பரா வரும்'னு டைரக்டர் பாராட்டுவார். நடிப்பில் மட்டும்தான் போட்டி. கேமிராவைவிட்டு வெளியே வந்ததும் ரெண்டு பேரும் நட்பிலும் அன்பிலும் கரைஞ்சுடுவோம். அவ ரொம்பவே நல்ல, க்யூட்டானப் பொண்ணு.''

 “நடிகை டு நடுவர் அனுபவம் எப்படி?”

“சன் டிவியின் ‘அசத்தல் சுட்டீஸ்' நிகழ்ச்சியில் நடுவராக வர்றேன். என்னை நடுவராக கூப்பிட்டப்போ, 'தமிழ்கூட சரியா தெரியாத நான் எப்படி?;னு தயங்கினேன். 'தைரியமா வாங்க. குட்டீஸ் திறமைகளைப் பார்த்து கமென்ட் பண்ணுங்க'னு சொன்னாங்க. சரின்னு ஒப்புக்கிட்டேன். இவ்வளவு திறமையான குட்டீஸ்களைப் பார்க்கும்போது அசந்துபோறேன். எல்லாத்துக்கும் தேங்க்ஸ்!” (வி)

No comments:

Post a Comment