மாமனார் மனதில் இடம்பிடித்த சமந்தா

அக்டோபர் மாதம் 6, 7 தேதிகளில் திருமணம் முடிந்த பிறகு சமந்தாவும் - நாகசைதன்யாவும் தேனிலவுக்கு வெளிநாடு சென்று திரும்பினார்கள். திருமணத்துக்கு முன்பு சமந்தா அவருடைய மாமனார் நாகார்ஜுனாவுடன் ‘ராஜுஹரிகாதி-2’ படத்தில் நடித்தார். இந்த பட விளம்பர நிகழ்ச்சிகளில் மருமகள் சமந்தாவை நாகார்ஜுனா புகழ்ந்தார். திருமணத்துக்கு பிறகு சமந்தா, நாகசைதன்யா இருவரும் நடிக்கத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் சமந்தா குறித்து நாகார்ஜுனா அளித்த பேட்டி... “ஒரு சிறந்த நடிகை எனது மருமகளாக வந்து எங்கள் கலைக் குடும்பத்தில் இணைந்திருக்கிறார். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் ‘ராஜுஹரிகாதி-2’ படத்தில் நடித்த போது சமந்தாவின் நடிப்பு ஆற்றலை தெரிந்து கொண்டேன். நாகசைதன்யாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே சமந்தா எங்கள் குடும்பத்தில் ஒருவராகத்தான் இருந்தார். திருமணத்துக்கு முன்பு என்னை சார் என்று அழைப்பார். இப்போது பாபாய் என குடும்ப பாசத்துடன் அழைக்கிறார்”.

No comments:

Post a Comment