![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgy6b9JOQ03-pqctu3GuJ2NqqA5KLnhkbaIsx8MyovX25101xK69Jya2Ak-aJi2NJnKI_s99JEWzTJfBhY-RjdsGDznO8__Wdryd-0yXcQz2u4tEZNpM4Gg1JNncUWAL6scdaDih3X7ZD7T/s320/625.500.560.350.160.300.053.800.900.160.90.jpg)
ஆண்கள் இந்த விஷயத்தில் எல்லாம் பக்காவாக இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு பட்டியல் கொஞ்சம் அப்படி, இப்படி இருந்தாலும் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது…
ஓர் காலத்தில் ஆண்களை எதிர்த்து மூச்சு கூட விட முடியாத சூழலில் தான் பெண்கள் சமையலறைகளில் பூட்டி வைக்கப் பட்டிருந்தனர். ஐ.டி. என்ற மாய மந்திர சொல் தான் அவர்களை வெளியுலகிற்கு கொண்டு வந்தது என்று சொல்வது மிகையாகாது. இன்று ஆண்களுக்கு நிகராய் மட்டுமல்ல மெட்ரோபாலிட்டன் நகரங்களில் அவர்களையும் மிஞ்சி நிற்கின்றனர் பெண்கள்.
அறுசுவையிலும், சுத்தபத்ததிலும் பக்காவாக இருகின்றனரோ இல்லையோ, இந்த காலத்து பெண்கள் அறிவியலிலும் செக்ஸிலும் மிக பக்காவாக இருக்கின்றனர். ஆண்களே கொஞ்சம் ஓரங்கட்டி நிற்க வேண்டும் பெண்களின் இந்த அறிவு கூர்மைக்கு முன். முன்பெல்லாம் ஆண்கள் தான் பெண்களிடம் பாட தெரியுமா, ஆட தெரியுமா, சமைக்க தெரியுமா என கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஆண்கள் இந்த விஷயத்தில் எல்லாம் பக்காவாக இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு பட்டியல் கொஞ்சம் அப்படி, இப்படி இருந்தாலும் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது…
காலை பொழுதில் கொஞ்சும் பேச்சு
காலை எழுந்ததும் ஜிம்மிற்கு செல்லும் ஆண்களை விட, ஜிம்மி, பொம்மி என கொஞ்சும் ஆண்களை தான் பெண்கள் எதிர்பார்கின்றனர். ஆண்கள் எப்போதும் அவர்களை குழந்தையை போல கொஞ்ச வேண்டுமாம்!
கட்டிப்பிடி வைத்தியம்
தொட்டும் தொடாமல், பட்டும் படாமல், தாமரை இலை நீரை போல ஒட்டியப்படிக் கட்டிப்பிடிக்க தெரிய வேண்டும் என ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.
50/50
கோபமேக் கூடாது என்றெல்லாம் பெண்கள் எதிர்பார்க்கவில்லை, அந்த கோபத்திற்கு பின் அரவணைக்க தெரிந்த அன்பும் இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கின்றனர்.
தெளிவு
இது கொஞ்சம் அறிவு சார்ந்தது, ஆண்கள் அவர்கள் எடுக்கும் முடிவில் குழப்பம் இல்லாமல் தெளிவாகவும், தீர்க்கமாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றனர்.
நன்றாக சாப்பிட வேண்டும்
நன்றாக சாப்பிடும் ஆண்களை விரும்புவதாக பெண்கள் கூறுகின்றனர். அதுவும் அவர்கள் சமைத்துப் போடும் உணவுகளை ஒரு கை பார்க்க வேண்டுமாம். (சாப்பிடுற மாதிரி இருந்தா நாங்க சாப்பிட மாட்டோம்’னா சொன்னோம்!
தீர்வு காணும் திறன்
வாழ்வியல் பிரச்சனைகள் மட்டுமின்றி, பல்பு ஃப்யூஸ் போனால், ஃபேன் நன்கு சுற்றாவிட்டால், எலெக்ட்ரிக் வேலை என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் திறன் இருக்க வேண்டுமாம்!! (என்னமா நீங்க இப்படி எல்லாம் எதிர்பாக்கிறீங்க!
No comments:
Post a Comment