சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தாலும், அதன் சிறந்த செயல்பாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பாராட்டும், பரிசும் குவிந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி கேப்டன் மிதாலிராஜ் 6 ஆயிரம் ரன்களை கடந்தார்.
இதன் மூலம் ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை தனதாக்கினார். சாதனை படைத்த மிதாலி ராஜூக்கு பி.எம்.டபிள்யூ. சொகுசு கார் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. அவருக்கு ஐதராபாத் பேட்மிண்டன் சங்க துணைத்தலைவர் சாமுண்டேஸ்வரநாத் சொகுசு காரை பரிசாக வழங்கினார்.
பின்னர் மிதாலிராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வி கண்டதால் எங்கள் அணியினர் மிகுந்த வேதனை அடைந்தனர். இது போன்ற சிறப்பான வரவேற்பு அணிக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment