நடிகர் பிரசன்னாவை காதலித்து மணந்த சினேகா சிலகாலம் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த ஆண்டு தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்கு அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி தந்திருந்தார். படம் வெளியானதுபோது அதில் தான் நடித்த பல காட்சிகள் வெட்டப்பட்டிருந்ததைக்கண்டு கோபம் அடைந்தார். கோபத்தை வெளிப்படையாகவே காட்டினார். இதனால் ஹீரோ சிவகார்த்திகேயன், இயக்குனர் மோகன்ராஜா அதிர்ச்சி அடைந்தனர்.
சினேகாவின் கோபத்தை அலட்சியம் செய்யாமல் அதற்கு உரிய பதில் அளித்தார் மோகன்ராஜா. காட்சியின் நீளம் கருதியே ஒரு சில காட்சிகள் நீக்கப்பட்டதாக தெரிவித்ததுடன் வருத்தமும் தெரிவித்தார். அத்துடன் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பசியும் பட்டினியுமாக ரிஸ்க் எடுத்து நடித்த காட்சிகள் வெட்டப்பட்டதால்தான் சினேகாவுக்கு இவ்வளவு கோபமாம்.
அந்த டென்ஷனிலிருந்து இன்னும் மீளாத நிலையில் தற்போது தனது கவனத்தை வேறு மொழி படங்களில் திருப்பி இருக்கிறார். முனிரத்ன குருஷேத்ரா என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதுடன், தெலுங்கில் ராம் சரண் நடிக்க பயாபதி ஸ்ரீனு இயக்கும் புதியபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 3 வருட இடைவெளிக்கு பிறகு சினேகா தெலுங்கு படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment