
இச்சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கூறுகையில், ஹைதராபாத்தின் வராசிகுடா பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவருக்கு ஃபேஸ்புக் மூலம், பிக்சாபதி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று, பிக்சாபதி, அந்தப் பெண்ணுடன் இணைந்து பார்க், ஷாப்பிங் என்றெல்லாம் சுற்றிவிட்டு இறுதியில் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிக்சாபதி, அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று கூறியுள்ளனர்.
இதே போன்று, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, 16 வயது இளம்பெண் ஒருவர் இரு வாலிபர்களால் தியேட்டரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து பைக் மூலமாக தப்பியோடியுள்ளனர். பின்னர், அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment