திருமணத்துக்குப் பின்னரும் நல்ல கேரக்டர்கள் கிடைக்கும்வரை தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகை பாவனா கூறியுள்ளார்.
மலையாள நடிகை பாவனா தமிழில் ‘சித்திரம் பேசுதடி, ‘அசல், ‘தீபாவளி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் கன்னடத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் கன்னட படத் தயாரிப்பாளரான நவீனுக்கும் காதல் மலர்ந்தது. 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இவர்கள் கடந்த மாதம் 22ம் தேதி கொச்சியில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு சில நாட்கள் கணவர் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாவனா, மீண்டும் சினிமாவுக்கு திரும்பி உள்ளார். திருமணத்துக்குப் பின் சினிமாவில் நடிப்பது பற்றி பாவனா கூறுகையில் “சினிமாவில் நல்ல கேரக்டர்கள் கிடைக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். சினிமாவை விட்டு விலகும் எண்ணம் எதுவும் இல்லை. என் கணவரும் இதற்கு சம்மதித்துவிட்டார் என்றார்.

No comments:
Post a Comment