விஜய்யுடன் நடிக்க மறுத்த பிரபல தொகுப்பாளினி!

விஜய்யுடன் நடிக்க வாய்பபு வந்தால் கண்டிப்பாக நான் நடிக்கமாட்டேன் என்று டிவி தொகுப்பாளினி அஞ்சனா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஜய். அவர் நடித்த படங்கள் வெளியானால் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்கள் அவரின் 62வது படத்திற்காக ரசிகர்கள் தற்போது ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தொகுப்பாளினி அஞ்சனா தன்னுடைய சினிமா பயணம் குறித்து அளித்த பேட்டியில், அதில் அவரிடம் ‘‘விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?’’ என்று கேட்டதற்கு, ‘‘விஜய் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வருவது நல்லதுதான். ஆனால் நான் கண்டிப்பாக அவர் படத்தில் நடிக்க மாட்டேன். அவர் படம் மட்டுமில்லை நான் சினிமாவில் நடிக்கமாட்டேன் என்ற கொள்கையை வைத்துள்ளேன்’’ என்றார்.,,

No comments:

Post a Comment