காற்றில் களையும் கூந்தலை
வெறும் கைகளால் கோதிகொள்ளும்போது ரசிப்பார்கள்.
சீவிய தலைமுடியை
கலைக்கும்போதும் ரசிப்போம்.
வச்ச கண்ணு வாங்காம நம்மல பாத்துட்டு
பாக்காத மாதிரி நடிக்கும் நடிப்பை ரசிப்போம்.
சிக்னல்ல நிக்கும்போது பைக் கண்ணாடியில்
தன்னை பாத்துகொள்ளும்போதும் ரசிப்போம்.
வளந்து வளராத அரும்பு மீசையை
முறுக்கி பார்க்கையில் ரசிப்போம்.
டி.வி ரிமொட்டுகாக
தங்கையோடு சண்டைபோடும்போது ரசிப்போம்.
சிரிப்பை அடக்கிக்கொண்டு
கோவமாய் பேசுவதுபோல் நடிக்கையில் ரசிப்போம்.
சிரித்துக்கொண்டே செல்போன்னை பார்க்கும்போது ரசிப்போம்.
புருவம் உயர்த்தி கேள்வி கேட்கும் போது ரசிப்போம்.
இரண்டு நாள் கிளீன் ஷேவ் பண்ணாத தாடியை ரசிப்போம்.
குழந்தையின் காதில் ரகசியம் பேசுகையில் ரசிப்போம்.
நண்பர்களோடு சிரிச்சுபேசும்போது ரசிப்போம்.
கடந்து செல்லும்போது நம்மை ஓரக்கண்ணால் பார்க்கையில் ரசிப்போம்.
கவிதை சொல்ல நினைத்து வார்த்தை வராமல் தவிக்கையில் ரசிப்போம்.
கைபிடிச்சு கண் பார்த்து பேசும்போது ரசிப்போம்.
ஐஸ் கிரீம், சாக்லேட் நமக்கு வாங்கி தரும்போது
வம்பு பண்ணி பதிய சாப்ட்டு தரும்போது ரசிப்போம்.
பைக்ல போகைல நம்ம அவங்க
தோள்ல கைபோட்டுகுவோமானு பைக் கண்ணாடில பாக்கும் போது ரசிப்போம்.
வேட்டி கட்டி அதிலயும் அத மடிச்சு கட்டி
நடந்து வரும் தோரணைய பாத்து ரசிப்போம்.
நாள் முழுக்க போன் பேசிட்டு
போன்ன வைக்க போறப்ப போன்ன வைக்க மனசே இல்லன்னு சொல்லுரப்போ ரசிப்போம்.
பொண்ணுக எப்பலாம் பசங்கள ரசிக்கிரோம்ன்னு சொல்லிட்டேன்...
No comments:
Post a Comment