`நலிவடைந்த நெசவாளர்களை கைத்தூக்கிவிடணும்!" - சேலை பிசினஸில் இறங்கிய அஞ்சனா

ன் மியூசிக்' அஞ்சனாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர், 'கயல்' படத்தின் நாயகன் சந்திரனைக் காதலித்து கரம் பிடித்தார். இவர்களுக்கு அழகான `ருத்ராக்‌ஷ்' என்கிற குழந்தை இருக்கிறது. தாய்மையை ஆனந்தமாகக் கொண்டாடி வரும் அஞ்சனா, தற்போது பிசினஸில் இறங்கியிருக்கிறார். 'kanakadharadrapes' என்கிற பெயரில் ஆன்லைன் பிசினஸில் இறங்கியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.
``என்னுடைய கோ சிஸ்டர் ஆன்லைன் மூலம் சின்னதா பிசினஸ் பண்ணிட்டு இருந்தாங்க. எனக்கு எப்பவும் சேலை ஃபேவரைட். நார்மலாவே சேலை கட்டுறது எனக்குப் பிடிச்ச விஷயம். பிடிச்ச விஷயத்தை வச்சு  ஏதாச்சும் பண்ணலாம்னு தோணுச்சு. லாபம் சம்பாதிக்கிறதைவிட, நம்முடைய கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுபோறது ரொம்ப முக்கியம். இந்தத் தலைமுறையினர் பலரும் சேலை கட்டுறதுல ரொம்பவே ஆர்வமா இருக்காங்க. அந்தச் சேலையை எப்படி எக்ஸ்குளூசிவா கொடுக்க முடியும்னு யோசிச்சோம்.

நாங்க, நேரடியா நெசவாளர்கள்கிட்ட இருந்துதான் சேலைகள் வாங்குறோம். அவங்க கொடுக்குறதை அப்படியே வாங்காம, அதுல நிறைய டிசைன்ஸ் சொல்லி நெய்யச் சொல்றோம். எங்களுக்கு ஒரு சேலையை டிசைன் பண்ணா எப்படிப் பண்ணுவோமோ, அந்த அக்கறையோட தான் எல்லா சேலைகளையும் டிசைன் பண்ணி நெய்யச் சொல்றோம். கடைகளில் வாங்கும்போது அதிகமா காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. அதுவே, நேரடியா கைத்தறி நெசவாளர்கள்கிட்ட இருந்து வாங்குறப்போ, அந்த லாபம் நேரடியா அவங்க கைக்குப் போகும். அதைவிட நம்ம கடைகளில் வாங்குறதைவிடவும் நெசவாளர்கள் கேட்குற விலை கம்மியாதான் இருக்கும். அவங்ககிட்ட நாங்க எந்த பேரமும் பேசுறது இல்ல. அவங்க என்ன விலை கேட்குறாங்களோ அதைக் கொடுத்துதான் வாங்குறோம்...

இப்போ, லினன்( linen) பேட்டர்ன்ஸ் நிறையப் பேருக்கு பிடிக்குது. ஆன்லைனில் கிடைக்கிற லினன் மெட்டீரியலில் காட்டன் அதிகமா இருக்கும்.  குவாலிட்டி படி அது சரியான லினன் துணியா இருக்காது. அது எங்க கிடைக்குமோ அங்க பேசி, ஒரிஜினல் லினன் துணி வாங்கி அதை விக்கிறோம். அந்த சேலைக்கு நல்ல ரெஸ்பான்ஸ்  கிடைச்சது. ஆடியன்ஸ்கிட்ட கலர் காம்பினேஷன் கொடுத்து அவங்க எந்த கலர் செலக்ட் பண்றாங்களோ, அந்த கலர்ல சேலை நெய்து கொடுக்கிறோம்.  அதனால, சிறுதொழில் பண்றவங்களுக்கு உதவியா இருக்கும். விவசாயிகள் எப்படிக் கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்களோ, அதேமாதிரி இப்போ கைத்தறி நெசவாளர்கள் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. லூம் வந்ததுக்கு அப்புறம் இவங்களுடைய தொழில் முடங்கிப்போச்சு. பரம்பரை பரம்பரையா நெசவுத் தொழிலை பண்ணிட்டு இருக்காங்க. நெசவைத் தவிர்த்து, அவங்களுக்கு வேற தொழில் தெரியாது. நலிவடைந்த நெசவாளர்களுக்கு நம்மால முடிஞ்ச உதவியைச் செய்யணும்னு நினைச்சோம். நெசவுத் தொழிலை இழந்துடக்கூடாது. அதை மறுபடியும் கைதூக்கிவிடுறது ரொம்ப முக்கியம்'' என்றார். ..

No comments:

Post a Comment