அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கிய இந்தப் படம், இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக். இதில், அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்...
இந்த படத்துக்கு ‘வலிமை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 10-ந் தேதி இதன் பூஜை நடைபெற்றது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. அத்துடன், அஜித்துடன் நடிப்பவர்கள் யார், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்ற விவரமும் இன்னும் அறிவிக்கப்படவில்லை..
வடிவேலு, நஸ்ரியா உள்ளிட்ட சிலர் இந்தப் படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. ஒருவழியாக நாளை படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார் போனி கபூர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்...
No comments:
Post a Comment