நடிகர் - தனுஷ்
நடிகை - மேகா ஆகாஷ்
இயக்குனர் - கௌதம் வாசுதேவ் மேனன்
இசை தர்புகா சிவா
ஓளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா
தனுஷ் சென்னையில் தங்கி படித்து வருகிறார். அவர் படிக்கும் கல்லூரியில் திரைப்பட படப்பிடிப்பு நடக்கிறது. அந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் மேகா ஆகாஷை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் தனுஷ். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அந்த கல்லூரியில் 2 மாதங்களுக்கு மேல் ஷூட்டிங் நடைபெறுகிறது...
இருவரும் ஜாலியாக காதலித்து வருகின்றனர். தனுஷிடம் தான் ஒரு அனாதை என கூறும் மேகா ஆகாஷ், இப்படத்தின் இயக்குனர் தான் தன்னை சிறுவயதில் இருந்து வளர்த்து வருவதாக கூறுகிறார். அவரின் வற்புறுத்தலின் பேரிலேயே இப்படத்தில் நடிப்பதாகவும் சொல்கிறார். உடனே தனுஷ் அவரை யாருக்கும் தெரியாமல் தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்கிறார்...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioirukjXl79RBVqaBrg45R3AZKDdOUF4mgYR56X-OdKc_8ujRUu6fKd2106QYat9c7Hkn9lxkVNFYKbIahK_yxJVx-If3kLXngH2qL9gRF5APou9XJNtZ2LxYmnfvlQWUVaAsMShN6Zvhe/s400/78561556_973698096345052_3172831038934089728_n.jpg)
சில நாட்களுக்கு பின் மேகா ஆகாஷை தேடி அவரது கார்டியன், தனுஷ் வீட்டுக்கு வருகிறார். அப்போது தனுஷிடம் 5 நாட்கள் கழித்து என்னை பார்க்க வா என சொல்லிவிட்டு தந்தையுடன் சென்னை செல்கிறார் மேகா ஆகாஷ். அதேபோல் 5 நாட்களுக்கு பின் மேகா ஆகாஷை பார்க்க சென்னைக்கு செல்லும் தனுஷ், அவரை தேடி அலைகிறார். எங்கு தேடியும் கிடைக்காததால் விரக்தி அடையும் தனுஷ் மீண்டும் சொந்த ஊருக்கு செல்கிறார். அவரிடம் இருந்து அழைப்பு வரும் என காத்திருக்கும் தனுஷுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU4POGInzpz5iIs-VE1gwXMk7vo8SkFkYhag7rYKPhLglj6TxwW3yxSos4lq8PiuA37MYTxamu1MMKLKsEyQ9HQKI62MrzNCf7WFC6bX2DPSVYl-_NTFx9KbnfpoujVqRo5et3vfEV7ddL/s640/79505942_973698049678390_7767891307678138368_n.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRiMAyQ8lq0ftHXlXTnZXvjTTdN4Ere3sJ7sq2g6IRWK1qOQ4Yi4zStM_cfFfQz5zuv_pVyyp2gi9z4Y9z9ux2Jkzu-b5BZR2pRy7U7R-P1ZQxusVbaYEPz_TY9E3Ci3D8yUl6z9FhPkGH/s400/78814494_973698149678380_7227829522740019200_n.jpg)
தனுஷ், வழக்கம் போல் தனது அசத்தலான நடிப்பால் கவர்கிறார். காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் காட்சிகள் என ஒவ்வொரு காட்சியிலும் முத்திரை பதிக்கிறார். மேகா ஆகாஷ் தனது அழகால் கவர்கிறார். தனுஷ்-மேகா ஆகாஷ் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்...
சசிகுமார் சிறிது நேரமே வந்தாலும் படத்தின் திருப்புமுனையாக இவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதுவரை கிராமத்து கதையில் நடித்து வந்த சசிகுமாரை, இந்த படத்தில் ஸ்டைலாக வருவது, ஆங்கிலத்தில் பேசுவது என வித்தியாசமாக காட்டியுள்ளார் கவுதம் மேனன்....
No comments:
Post a Comment