2007 ஆம் ஆண்டு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது எப்படி? டோனி விளக்கம்
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக விளங்கிய டோனி, நடப்பு ஆண்டு துவக்கத்தில் ஒருநாள் போட்டி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், கேப்டன் விராட் கோலிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். 2007 ஆம் ஆண்டு டோனி தனது 26 வயதில் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். டோனியைவிட மூத்த வீரர்கள் இருந்த போதிலும், கேப்டனாக டோனி அறிவிக்கப்பட்டது அப்போது அனைவரது புருவத்தையும் உயர்த்தச்செய்தது.
இந்த நிலையில், 2007 ஆம் ஆண்டு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது எப்படி? என்று டோனி விளக்கம் அளித்துள்ளார். டோனி கூறியிருப்பதாவது:- “ கேப்டன் தேர்வு செய்யப்படும் போது நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நான் பங்கெடுக்கவில்லை. எனினும், ஆட்டத்தின் போக்கை கணிக்கும் எனது திறமையால் கிடைத்திருக்கலாம். ஆட்டத்தின் போக்கை கணிப்பது மிகவும் முக்கியமானது.
நான் அப்போது, அணியில் இளம் வீரராக இருந்தாலும், எனது கருத்தை மூத்த வீரர்கள் கேட்கும் பொழுது, ஆட்டத்தை பற்றிய எனது கருத்தை தெரிவிக்க நான் தயங்குவதோ, அச்சப்படுவதோ இல்லை. உத்தேசமாக இதுவாக கூட இருந்திருக்கலாம். அந்த நேரத்தில் அணியில் உள்ள அனைத்து வீரர்களிடம் நான் நல்ல நட்புணர்வுடன் இருந்தேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில், 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதியில் வெற்றி பெற்றதுதான் மிகச்சிறந்த தருணம் ஆகும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment