நடிகர்கள் கூச்சமின்றி, அச்சமின்றி இருக்க வேண்டும்: வித்யாபாலன்
நடிகர்கள் கூச்சமின்றியும், அச்சமின்றியும் இருப்பது மிக முக்கியம் என பாலிவுட் நடிகை வித்யாபாலன் கூறியுள்ளார். குல்ஷன் குமார் திரைப்படக் கல்லூரி பற்றிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் வித்யாபாலன். அப்போது ஊடகத்தினர் அவரது படம் குறித்தும், நடிப்பு குறித்தும், 100 கோடி வசூல் குறித்தும் கேள்விகள் கேட்டனர்.
கேள்விகளுக்கு வித்யா பதிலளிக்கையில், "நடிகர்கள் கூச்சமின்றி இருத்தல் முக்கியம். எந்தத் தயக்கமும், அச்சமும் இருக்கக்கூடாது. தும்ஹாரி சூலு சந்தோஷமான திரைப்படம். நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையில் ஒரு பகுதியைப் பார்ப்பது போல இருக்கும். சூலூ அதிக ஆற்றல்மிக்கவள். அனைத்தையும் ஒருமுறை முயற்சிக்க வேண்டும் என்று நினைப்பவள். படம் முடிந்து வெளிய வருபவர்கள் முகத்தில் கண்டிப்பாக புன்னகை இருக்கும்.
ஒரு படம் மக்களின் மனதை வென்றால் அது ஹிட். தயாரிப்பாளர்கள் போட்ட பணத்துக்கு மேல் சிறிது லாபம் வந்தால் அது சூப்பர் ஹிட். அவ்வளவுதான்.
வெற்றிகரமாக திகழ எந்த ஒரு பாதையையும் பின்பற்ற முடியாது. வெற்றிக்கான நமது பாதையை நாம் தான் கண்டறிய வேண்டும். மேலும், ஒருவர் எந்தத் துறையிலும் வெற்றி பெற தன்னம்பிக்கைதான் மிகப்பெரிய தகுதியாக இருக்கும்” என்று பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment