பிளான் இந்தியா’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், நாட்டில் சிறுமிகள், பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதிப்பு உள்ள மாநிலங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளது. அந்த ஆய்வறிக்கையை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:
நாட்டில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள மாநிலங்களில் பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த நிலையில் கேரளா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதேபோல் பெண்களுக்கு பாதிப்புள்ள மாநிலங்கள் வரிசையில் பிஹார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன.
கல்வி, சுகாதாரம், வறுமை, வன்முறைகளுக்கு எதிரான பாதுகாப்பு ஆகிய 4 முக்கிய அம்சங்களில் பெண்கள் சந்திக்கும் சவால்களை அடையாளம் காண இந்த ஆய்வறிக்கை உதவும் என்று கூறப்படுகிறது. அதன்படி கோவா மாநிலம் பாதுகாப்பு விஷயத்தில் முதலிடத்திலும் பெண் கல்வியில் 5-வது இடத்திலும் உள்ளது. சுகாதார விஷயத்தில் 6-வது இடமும் வறுமையில் 8-வது இடத்திலும் கோவா உள்ளது. அதற்கடுத்த நிலையில் கேரள மாநிலம் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment