உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் சாந்தா கோச்சார், பிரியங்கா சோப்ரா

உலக அளவில் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஐசிஐசிஐ தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக அளவில் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் ஐசிஐசிஐ தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சார் 32-வது இடத்தில் உள்ளார். எச்சிஎல் கார்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார் 57-வது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜூமுதார் 71-வது இடத்திலும் உள்ளனர்.
இந்துஸ்தான் டைம்ஸ் மீடியா நிறுவனத்தின் தலைவர் ஷோபனா பார்ட்டியா 92-வது இடத்திலும், இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 97-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி 11-வது இடத்தில் உள்ளார். அதேபோல் மற்றொரு அமெரிக்க வம்சாவளி பெண்ணான ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே 43-வது இடத்திலும் உள்ளார்.

No comments:

Post a Comment