![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWneQY4_sm5qsF1zlseeQIe60axJ2uxBmoDIb5vSDjMXhImlW-XNrw-5WDUhBnoSHYtRClV767YhKQDJJMMHbiG25bGVQV5wKbVAsMunTiyYJQVE_jTVNEG7Nq5Hmr-9q8jZbMgbWfAD9q/s400/Sunaina.gif)
நடிகைகள் மீ டூ வில் பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வரும் நிலையில் சுனைனாவும் தனக்கு ஏற்பட்ட தொந்தரவுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–
‘‘எனக்கு அப்போது 12 வயது இருக்கும். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வேன். ஆட்டோ ஓட்டுநர் அருகில் அமர்ந்து செல்ல மாணவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் அந்த டிரைவர் என்னை மட்டும் அருகில் உட்கார வைத்துக்கொள்வார். அதை பெருமையாக நினைப்பேன்.
அவர் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி செல்வேன். அப்போது அந்த டிரைவர் வெளியே சொல்ல முடியாத சில்மிஷங்கள் செய்வார். அவரது செயல் அப்போது எனக்கு புரியவில்லை. இப்படி 10–ம் வகுப்பு படித்து முடிக்கும்வரை அந்த டிரைவர் என்னை பலாத்காரம் செய்தார்.
ஒரு கட்டத்தில் எனக்கு புரிந்தது. உடனே ஓட்டுநர் மீது கோபம் வந்தது. எனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் சொல்லவில்லை. இப்போது அந்த டிரைவரை தேடுகிறேன். அவன் சட்டை காலரை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க ஆத்திரத்தோடு இருக்கிறேன்.’’
இவ்வாறு சுனைனா கூறினார்.
No comments:
Post a Comment