தமிழ் தொலைக்காட்சிகளில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிற சீரியல்களில் அதிகப்படியான மக்களால் விரும்பிப் பார்க்கப்படுகிற சீரியலில் ஒன்று, செம்பருத்தி. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிற இந்த சீரியலில், ப்ரியா ராமன், கார்த்திக் ராஜ், `ஊர்வம்பு' லக்ஷ்மி, சபானா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்...
இதற்கிடையில், கார்த்திக் - சபானா இருவருக்கிடையேயும் நிஜமாகவே காதல் இருக்கிறது எனக் கிசுகிசுக்கிறார்கள், இருவரையும் நன்கு அறிந்த சிலர். `கார்த்திக் பொதுவாகவே யாரிடமும் அதிகம் பேசமாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அவருக்கான காட்சி முடிஞ்சா, ரூமுக்குப் போயிடுவார். மத்தவங்க அடிக்கிற அரட்டைகள்ல கலந்துக்க அவர் விரும்புறதில்லை. ஆனா, கொஞ்சநாளா ஷூட்டிங் இல்லாத நேரத்துல சபானாகிட்ட நின்னு முகம் கொடுத்துப் பேசுறார். இந்த ஒரு விஷயம்தான் கடந்த சில வருடங்கள்ல நாங்க அவர்கிட்ட பார்த்த மாற்றம்.' என்கிறார்கள், அவர்கள் சோஷியல் மீடியா பக்கமும் தலைகாட்டுவதை விரும்பாத கார்த்திக், இன்ஸ்டாகிராமில் மட்டும் இருக்கிறார். இந்த இடத்தில் மேலும் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர், அந்த நெருக்கமானவர்கள்..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZV6mFAf3pwHcaIf90GMz7XrZ48a1YNzExPkF-yx4lb7RHl45sCCz0S5hibToZOsrHQ1qRr7X4ufwtdpM4IdEo3jcmmubcZAydzrWe135m6u-T7SF2oYcJ2KlEs4gDVAPB9ymm9QhhaWGl/s400/k_s_16399.jpg)
கார்த்திக் மட்டுமல்ல; சபானாவும் இன்ஸ்டாகிராமில் இருக்கிறார். சமீபத்தில் புதிதாக ஒரு சமூக வலைதளத்தில் கார்த்திக் இணைய, அடுத்த சில நாள்களில் சபானாவும் அதில் இணைந்தார். `மீடியாவுலேயும் சரி, சோஷியல் மீடியாவுலேயும் சரி, எதை எப்படிப் பேசணும்கிறதை நல்லா யோசிச்சிட்டுப் பேசுங்க' என கார்த்திக் சபானாவுக்குச் சொல்லியிருக்கிறார். சபானாவும் அதை அப்படியே ஃபாலோ செய்கிறார். சபானா ஃபீல்டுக்கு வந்த புதுசுல இருந்த மாதிரி கலகலப்பானவரா இல்லை. இப்போ யார்கிட்டேயும் எதையும் அளந்தே பேசறாங்க." என்கிறார்கள், இருவரையும் அறிந்தவர்கள்..கார்த்திக்கைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது, `அவர் எதையும் யார்கிட்டேயும் ஷேர் பண்ணிக்க விரும்பல" என்றார்கள். அவருக்கு நெருக்கமானவர்கள்.
என்கிட்ட பல பேர் இந்தக் கேள்வியைக் கேட்டுட்டாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறதால, இப்படியான தகவல்கள் பரவுறது சகஜம்தானே?!. ஆனா, எனக்கு இந்தக் கேள்விக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியல. அமைதியா கடந்துபோறது மூலமா, சோஷியல் மீடியாவுல வந்து கமென்ட் போட்டுக் கேட்கிறவங்ககிட்ட இருந்து தப்பிச்சிடலாம். ஆனா, பதில் சொல்லியே ஆகணும்கிற கட்டாயம் வந்தா, என் பதில் இதுதான். கார்த்திக்கூட லவ் இருக்குனும் சொல்லமாட்டேன்; இல்லைனும் சொல்லமாட்டேன்." என்கிறார், இவர்.
இப்போதெல்லாம் சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் சீரியல்களில் சேர்கிறார்களோ, இல்லையோ... அந்த சீரியல் முடிவதற்குள் நிஜ வாழ்வில் இணைந்து விடுகிற நிகழ்வுகளையும் பார்த்தே வருகிறோம். கத்தரிக்காய் மட்டுமல்ல, காதல் முற்றினாலும் கடைத்தெருவுக்கு வந்தே தீரும்.
No comments:
Post a Comment